“6ஆம் தேதி அதிமுக கூட்டமா? அதெல்லாம் இல்லையே” : அமைச்சர் மறுப்பு!

“6ஆம் தேதி அதிமுக கூட்டமா? அதெல்லாம் இல்லையே” : அமைச்சர் மறுப்பு!

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னையில் வரும் 6ஆம் தேதி நடைபெறும் என்ற தகவல் பொய்யானது என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கலில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர் இவ்வாறு கூறினார். சென்னையில் முதலமைச்சர் கலந்துகொண்ட காந்தி ஜெயந்தி விழாவில் பங்கேற்று விட்டு தற்போது தான் திண்டுக்கல் திரும்பியதாக கூறிய அவர், எம்எல்ஏவான தனக்கு இதுவரை 6ஆம் தேதி கூட்டம் நடப்பது தொடர்பான எந்த தகவலும் கட்சித் தலைமை அலுவலகத்திலிருந்து வரவில்லை என தெரிவித்தார்.

வேண்டுமானால் சந்தேகத்தை தீர்ப்பதற்காக கட்சித் தலைமை அலுவலகத்திற்கு போன் செய்து பேசுகிறேன் என்று கூறிய அமைச்சர் உடனடியாக தொடர்பு கொண்டார்.அனைவரது முன்னிலையிலும் போன் செய்து பேசிவிட்டு 6ஆம் தேதி எம்எல்ஏக்கள் கூட்டம் உள்ளது என்பது பொய்யான தகவல் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்