நீண்டநாளுக்குபின் மாளவிகா, ரீமாசென்..! சமூக வலைதளத்தில் வைரல்..!!

  • In Cinema
  • May 31, 2019
  • 220 Views
நீண்டநாளுக்குபின் மாளவிகா, ரீமாசென்..! சமூக வலைதளத்தில் வைரல்..!!

சென்னை:

நடிகை மாளவிகா மற்றும் ரீமாசென் ஆகியோரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் தற்போது வைரலாக பரவிவருகிறது.

மின்னலே, தூள், செல்லமே, திமிரு, வல்லவன் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரீமாசென். நடிப்புக்குப்பபின் ஷிவ்கரன் சிங் என்பவரை திருமணம் செய்துகொண்டு, திரையுலகை விட்டு விலகினார். அவருக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

அதேபோல், நடிகை மாளவிகா உன்னைத்தேடி, ஆனந்த பூங்காற்றே, ரோஜாவனம், வெற்றிக்கொடிகட்டு, பேரழகன், வசூல்ராஜா எம்பிபிஎஸ், சந்திரமுகி போன்ற படங்களில் நடித்தும், வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் பாடலுக்கு மாளவிகா குத்தாட்டம் ஆடியது பரபரப்பாக பேசப்பட்டது. இவர் கடந்த 2009ம் ஆண்டு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், மும்பையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் ரீமாசென்னும், மாளவிகாவும் திடீரென சந்தித்துக்கொண்டனர். அப்போது இருவரும் எடுத்த புகைப்படங்கள், சமூக வலை தளத்தில் பரவி ரசிகர்களிடையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்