கடன் பிரச்சனையில் நடிகர்கள்

  • In Cinema
  • September 19, 2019
  • 178 Views
கடன் பிரச்சனையில் நடிகர்கள்

சென்னை:

தமிழ் திரையுலகின் நடிகர்கள் தற்போது கோடிகளில் கடன்களோடு தள்ளாடிக்கொண்டிருக்கிறார்கள் என கூறப்படுகிறது.

தனுஷ், விஜய்சேதுபதி, விஷால் உள்ளிட்ட நடிகர்கள் தங்களது சொந்த தயாரிப்பில் கடன் பிரச்னையில் சிக்கித்தவித்து வருகிறார்கள். கடன் சுமைகள் ஒருபுறம் இருக்க, பேசப்பட்ட சம்பளம் சரியாக வராத காரணத்தினாலும் கடுமையான நெருக்கடியில் நடிகர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் ‘அசுரன்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், சில தயாரிப்பாளர்கள் சம்பளம் தராமல் ஏமாற்றுகிறார்கள் என தனுஷ் வெளிப்படையாகவே பேசியுள்ளார்.

தனுஷ் தயாரிப்பு நிறுவனமான ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ கடுமையான நஷ்டத்தில் இருப்பதாகவும், இதனால், பெரிய கடனில் இருக்கும் தனுஷ், வெளித்தயாரிப்புகளில் தொடர்ந்து கால்ஷீட் கொடுத்து வருகிறார்.

தனுஷை போலவே விஜய் சேதுபதியும் மிகப்பெரிய கடனில் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விஜய் சேதுபதியின் நண்பர் கூறுகையில், ஒவ்வொரு படமும் ரிலீசுக்கு வரும்போது பஞ்சாயத்து வரும். உடனே தன் சம்பளத்தை குறைத்துக்கொண்டு நடித்துகொடுத்துவிட்டு ரிலீசாக விஜய் சேதுபதி உதவுவது வழக்கம். இதனாலேயே அவர் பல கோடிகளை இழந்துள்ளார் என அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்