‘‘எனக்கும் காலம் வரும்’’ நடிகர் விஷால் ஆவேசம்!

  • In Cinema
  • May 10, 2019
  • 239 Views
‘‘எனக்கும் காலம் வரும்’’ நடிகர் விஷால் ஆவேசம்!

சென்னை:
தயாரிப்பாளர் சங்கத்தில் கடந்த சில நாட்களாக பிரச்னைகள் நீடித்து வரும் நிலையில், தற்போது தனி அதிகாரியை நியமிக்கப்பட்டு, அவருக்கு உதவ குழுவும் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், நடிகர் விஷால் நடித்துள்ள ‘‘அயோக்கியா’’ படம் இன்று வெளியாக தயராக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் தெலுங்கு உரிமையை வாங்கிய விதத்தில் அந்த படத்தின் தயாரிப்பாளருக்கும், அயோக்யா தயாரிப்பாளருக்கும் இடையே பிரச்னை உள்ளது.

சுமார் 4 கோடி ரூபாய் பைனான்ஸ் பிரச்சனையால் தான் அயோக்யா ரிலீசுக்கு சிக்கல் வந்துள்ளது. கடைசி நேரத்தில் படம் நிறுத்தப்பட்டதால் காலையில் தியேட்டர் வாசலில் காத்திருந்த ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நடிகர் விஷால், ‘‘எனக்கும் காலம் வரும்’’ என டுவிட்டரில் கோபத்துடன் பதிவு செய்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்