நடிகர் விஜய் 64வது படத்தின் லேட்டஸ்ட் நியூஸ்.!

  • In Cinema
  • June 9, 2019
  • 209 Views
நடிகர் விஜய் 64வது படத்தின் லேட்டஸ்ட் நியூஸ்.!

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வருகின்ற படம் இன்று முடிவடையவே இல்லை. அதற்கு முன்னாடியே விஜய்யின் 64வது படம் பற்றிய செய்திகள் வர ஆரம்பித்துள்ளது.

விஜய்யின் மிகவும் நெருங்கிய உறவினரான பிரிட்டோ இந்த படத்தை தயாரிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்னாடி பிவி கம்பைன்ஸ் என்ற நிறுவனத்தில்தான் விஜய்யின் ஆரம்ப காலகட்ட படங்கள் தயாரிக்கப்பட்டது.

மேலும், மாநகரம், கைதி படங்களின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

மாயா, அடங்க மறு, தீரன் அதிகாரம் ஒன்று, போன்ற படங்களின் ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார்.

பிலோமின் ராஜ் படத் தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இந்த டெக்னிக்கல் குழுவுடன் படத் தயாரிப்பாளர் பிரிட்டோ இருக்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வளம் வருகிறது. இதனால் விஜய்யின் 64வது படம் பற்றிய செய்திகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்