ரூ.125 கோடி.. சிம்புவின் மஹா மாநாடு

  • In Cinema
  • August 14, 2019
  • 198 Views
ரூ.125 கோடி.. சிம்புவின் மஹா மாநாடு

சென்னை:
நடிகர் சிம்புவுக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம் என்று சொல்லலாம். அண்மையில் ரசிகர்களுக்கு வருத்தம் அளிக்கும் வகையில் ஒரு தகவல் வந்தது.

அது என்ன என்றால் வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்திலிருந்து சிம்பு நீக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் இருந்தவர்களுக்கு தற்போது ஒரு சூப்பரான தகவல் வந்துள்ளது.

சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிப்பு சிம்பு மஹா மாநாடு என்ற தலைப்பில் படம் நடிக்க இருக்கிறாராம்.

ஒரு படத்தில் இருந்து நீக்கப்பட்ட அதே வேகத்தில் இப்படி ஒரு செய்தி அதிரடியாக வந்திருப்பது பலருக்கு ஆச்சரியம்தான்.

அதோடு மட்டுமின்றி படம் ரூ.125 கோடி அளவுக்கு பட்ஜெட் இருக்கிறதாம். இது 5 மொழிகளில் வரவுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்