பாலவாடி கிரமாத்தில் நடிகர் ராமராஜன் பிறந்தநாள் விழா

பாலவாடி கிரமாத்தில் நடிகர் ராமராஜன் பிறந்தநாள் விழா

இண்டூர்:
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம் பாலவாடி கிராமத்தில் நடிகர் ராமராஜன் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் இனிப்பு வழங்கி மிக சிறப்பாக கொண்டாடினர்.

பாலவாடி கிராமத்தில் ராமராஜன் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, மாரியம்மன் கோயிலுக்கு ராமராஜன் ரசிகர் மன்றம் சார்பாக ஒலி பெருக்கி கொடுக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ராமராஜன் ரசிகர் மன்ற தர்மபுரி மாவட்ட செயலாளர் ராஜ்ஜிமோகன், பாலவாடி பஞ்சாயத்து தலைவர் வேடி, செயலாளர் ரவி, பத்திரிகையாளர் வ.தங்கவேல் மற்றும் ரத்தினவேல், முருகன், அருள்மூர்த்தி, முனியப்பன், வெங்கடேஷ், உள்ளிட்ட அதிமுக தொண்டர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்