நான் முரட்டு சிங்கிள்தான்

  • In Cinema
  • August 22, 2019
  • 209 Views
நான் முரட்டு சிங்கிள்தான்

சென்னை:
நான் எப்பவுமே முரட்டு சிங்கிள்தான் என்று நடிகர் பிரேம்ஜி தெரிவித்துள்ளார்.

நடிகராக மட்டுமின்றி இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் பிரேம்ஜி. தற்போது பல படங்களுக்கு இசையமைத்தும் பாடியும் வருகிறார்.

இந்நிலையில், தனக்கு திருமணம் நடக்கப்போவதாக பேஸ்புக்கில் தகவல்கள் உலா வந்தது.
இது பற்றி ஜாம்பி பட விழாவில் விளக்கம் அளித்துள்ளார்.

கேம் ஓவர் என்ற டி&சர்ட் அணிந்து ட்விட்டரில் ஒரு பதிவிட்டேன். திருமணம் ஆனதால்தான் கேம் ஓவர்.

அது தற்போது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. இது பற்றி பலர் தன்னை தொடர்பு கொண்டு யார் அந்த பெண், எப்போது திருமணம் என்றெல்லாம் கூறி வந்தனர்.

நான் இன்னும் முரட்டு சிங்கிள்தான். அதனால்தான் முரட்டு சிங்கிள் என்ற டி&சர்ட் அணிந்து வந்திருக்கிறேன். எப்பவும் முரட்டு சிங்கிள்தான் என்று தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்