ஓசூரில் லாட்டரி விற்பனை.. 3 பேர் கைது

ஓசூரில் லாட்டரி விற்பனை.. 3 பேர் கைது

ஒசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்த 3 பேரை டவுன் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓசூர் நகர போலீசாருக்கு நகரப்பகுதியில் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து எஸ்.ஐ. வெங்கடேஷ் ஓசூர் பழைய நகராட்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அங்கு நின்றிருந்த ஒரு நபரை பிடித்து விசாரித்த போது அவர் ராயகோட்டை அவுசிங்போர்டு பகுதியை சேர்நத எர்ரசாமி என்று தெரியந்தது.

இதைப்போல நகரப்பகுதியில் பல இடங்களில் முருகன், சந்திரசேகர் ஆகியோர் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்து வந்ததாக கைது செய்து 3 பேரிடமும் ரூ.6,000 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தாசிரிப்பேட்டை பகுதியில் நின்றிருந்த ஒரு நபரை பிடித்து விசாரித்ததில் அவரிடம் 400 கிராம் கஞ்ச இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

தொடர்ந்து அவரிடம் விசாரித்த போது அவர் பெயர் அரிஷ்பாபு 41, என்று தெரிய வந்தது.

பிக்பாக்கெட் செய்தவர் கைது: ஓசூர் பேருந்து நிலையத்தில் பிக்பாக்கெட் அடித்த ஒருவரை தேனியை சேர்ந்த சந்தானபாண்டியன் என்பவர் கையும் களவுமாக பிடித்து டவுன் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் விகாரித்ததில் அவர் பெயர் தங்கராஜ் 30, என்பது தெரிய வந்தது. போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்