முகினின் தாய், தங்கையை சந்தித்த அபிராபி

  • In Cinema
  • September 10, 2019
  • 294 Views
முகினின் தாய், தங்கையை சந்தித்த அபிராபி

சென்னை:

‘பிகபாஸ் 3’ போட்டியாளரான நடிகை அபிராமி, பிக்பாஸ் வீட்டில் தனக்கு பிடித்த முகினின் தாய் மற்றும் தங்கையை சந்தித்தார்.

நடகை அபிராமி நடித்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’ படம் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி வெளியான நிலையில், பிக்பாஸ் நிகச்சியிலிருந்து வெளியேறியவுடன் படத்தை அபிராமி பார்த்து ரசித்தார். மேலும் டுவிட்டரில் அஜித் ரசிகர்களுக்கு தன்னுடைய நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து, அபிராமி தனக்கு பிடித்த போட்டியாளர்களின் குடும்பத்தை சந்தித்து வருகிறார். சாக்ஷி, சான்டி ஆகியோரின் குடும்பத்தாரை நேரில் சந்தித்தார். அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமிலும் பகிர்ந்தார்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் நெருங்கிய நண்ராக இருந்த முகின் ராவின் தாயாரையும், தங்கையையும் அபிராமி சந்தித்துள்ளார். அதன் புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்