வாட்ஸ்அப் செய்தி..9 பேர் துபாயில் தவிப்பு..!

வாட்ஸ்அப் செய்தி..9 பேர் துபாயில் தவிப்பு..!

துபாய்:

மோசடி ஏஜெண்டை நம்பி துபாயிக்கு சென்ற கேரளாவை சேர்ந்த 9 பேர் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.

கேரளாவில் இருந்தபோது, ஐக்கிய அரபு அமீரகத்தில் 15 நாளில் வேலை வாங்கித் தரப்படும் என்று வாட்ஸ்அப்பில் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.

அதனை நம்பி துபாய் சென்று ஷபீக் என்ற ஏஜெண்டை சந்தித்தனர். ‘விசிட்‘ விசாவுக்கு ரூ.70 ஆயிரம் அளிக்குமாறு ஷபீக் கூறவே, நகைகளை அடகு வைத்தும், நண்பர்களிடம் கடன் வாங்கியும் அந்த பணத்தை செலுத்தினர்.

அல் அய்ன் நகரில் சூப்பர் மார்க்கெட்டில் வேலை வாங்கி தருவதாக ஷபீக் உறுதி அளித்தார்.
ஆனால், அபுதாபியில் இறங்கியவுடன், அவர்களை வேறு ஒரு ஏஜெண்ட் அணுகினார். சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் தற்போது அவரை போலீஸ் பிடித்து சென்றுவிட்டது. வேறு புதிய வேலை தேடித் தருவதாக அந்த ஏஜெண்ட் கூறினார்.

இதனால், தாங்கள் ஏமாற்றப்பட்டதை 9 பேரும் உணர்ந்தனர். அல் அய்ன் நகரில் 5 பேரும், அஜ்மன் நகரில் 4 பேருமாக செய்வதறியாமல் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு இந்திய தூதரகம் பண உதவி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்