800 அடி மலையில் தீபம்

800 அடி மலையில் தீபம்

ஒசூர்:

800 அடி மலை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோயில் தீப திருவிழா ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த அந்தேவணபள்ளி அருகேயுள்ள துர்க்கம் பகுதியில் எழுந்தருளியுள்ள 800 அடிமலை மல்லிகார்ஜுனேஸ்வரர் திருக்கோயிலில் மகா தீபத் திருவிழா நடைபெற்றது.

திருவண்ணாமலை திரு கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பல்வேறு சிவன் கோயில்களில் தீபத் திருவிழா இனிதே நடைபெற்று வரும் நிலையில் தேன்கனிக்கோட்டை அருகே நடைபெறும் இந்த தீப திருவிழா இப்பகுதியில் பிரசித்திபெற்றது இப்பகுதியில் சிவபெருமான் 800 அடி மலைமீது அமர்ந்திருப்பதும் அவரை தரிப்பது தரிசிப்பதற்காக மலையேறி சென்று தரிசிப்பது பிரசித்திபெற்றது.

இந்த திருவிழா தொடர்ந்து ஏழு நாட்களாக நடைபெற்று ஸ்ரீமல்லிகார்ஜுனசுவாமி தினமும் தீபாராதனை பூஜைகள் நடத்தப்பட்டு இன்று தீப நாளான வீதி உலா எடுத்துவரப்பட்டு மாலை 6 மணி அளவில் தீபம் ஏற்றப்பட்டது இந்த விழாவை காண கர்நாடகா ஆந்திரா தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து ஏராளமானோர் கலந்து கொள்வது வழக்கம் அதை எடுத்து இன்று நடைபெற்ற தீபத் திருவிழாவில் எந்த ஒரு அசம்பாவிதம் ஏற்படக்கூடாது என்பதற்காக தேன்கனிக்கோட்டை காவல் ஆய்வாளர் சரவணன் அவர்கள் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இந்த தீபத் திருவிழாவில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஸ்ரீ மல்லிகார்ஜுனேஸ்வரர் அருள் பெற்று சென்றனர் விழாவிற்கு வந்த அனைத்து பக்தர்களுக்கும் சுவையான அன்னதானம் வழங்கப்பட்டது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்