படம் பார்க்கும் ரசிகர்கள் திருப்தியடைய வேண்டும் – கூறும் 7ஜி ஹீரோ ரவி கிருஷ்ணா

படம் பார்க்கும்  ரசிகர்கள் திருப்தியடைய வேண்டும் – கூறும்  7ஜி ஹீரோ ரவி கிருஷ்ணா

பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னமின் மகன் ரவி கிருஷ்ணா. இவர் செல்வராகவன் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி படத்தில் நடித்து பிரபலமானார். அதற்குப்பிறகு சுக்ரன், கேடி, காதல்னா சும்மா இல்லை, ஆரண்ய காண்டம் போன்ற படங்களில் நடித்தார். ஆயினும், முதல்படம் அளவுக்கு மற்ற படங்கள் வரவேற்பை பெற வில்லை. தொடர்ந்து 10 ஆண்டுகளாக நடிக்காமல் இருந்தவர் இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். இந்நிலையில் நடிகர் ரவி கிருஷ்ணா பேசுகையில், ஆரண்ய காண்டம் படத்திற்கு பிறகு ஏராளமான ககைள் கேட்டேன், எதிலும் திருப்தி ஏற்படவில்லை . இத்தனை காலம் கழித்து நடிக்கிறோம், நல்ல கதையாய் பண்ணனும் இருந்தேன். புதிய இயக்குனர் ஒருவரின் படத்தில் நடிக்க இருக்கிறேன்.7ஜி மாதிரி சூப்பர் காதல் கதை கொண்டது . கொரோனா ஊரடங்கு முடிந்த பின் படத்தை ஆரம்பிக்கிறோம். காசு கொடுத்து படம் பார்ப்பவர்கள் நல்ல படம் பார்த்தோம் என திருப்தியோடு செல்ல வேண்டும் என்று கூறினார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்