790 டன் வெங்காயம் இறக்குமதி

790 டன் வெங்காயம் இறக்குமதி

புதுடெல்லி:

மத்திய அரசின் ஒப்பந்தப்படி, முதல் தவணையாக வெளிநாட்டிலிருந்து 790 டன் வெங்காயம் இன்று மும்பை துறைமுகம் வந்தடைந்து.

கனமழை காரணமாக ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் வெங்காயம் விளைச்சல் சரிந்தது. இதனால் நாடு முழுவதும் நிலவிய தட்டுப்பாட்டால், வெங்காயத்தின் விலை ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, விலை உயர்வை கட்டுப்படுத்த எகிப்து, துருக்கி போன்ற நாடுகளில் இருந்து 49,500 டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது.

இந்நிலையில், மத்திய அரசு செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் முதல் தவணையாக வெளிநாடுகளில் இருந்து இரண்டு கப்பல்களில் 790 டன் வெங்காயம் இன்று மும்பை துறைமுகம் வந்தடைந்தது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்