மோடிக்கு 700 அடியில் 7,000 கிலோ கேக்

மோடிக்கு 700 அடியில் 7,000 கிலோ கேக்

சூரத்:

பிரதமர் மோடியின் பிறந்தநாளை வித்தியசமாக கொண்டாட, சூரத்தை சேர்ந்த பேக்கரி 700 அடியில் 7,000 கிலோ கேக்கை தயாரித்து வெட்டியுள்ளனர்.

பிரதமர் மோடியின் 69வது பிறந்தநாளான இன்று, பல்வேறு தலைவர்கள் மற்றும் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி உள்ளிட்ட விளையாட்டுத்துறையை சேர்ந்த பிரபலங்கள் உள்ளிட்டோர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் பிறந்தநாளை ஒருவாரம் கொண்டாட பாஜகவினர் முடிவு செய்த நிலையில், சூரத்தை சேர்ந்த பேக்கரி உரிமையாளர் ஒருவர், 7000 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி மோடியின் பிறந்தநாளை கொண்டாட முடிவுசெய்துள்ளார்.

இதனையடுத்து, சர்சனா கன்வென்ஷன் சென்டரில் 700 பேர் இந்த கேக்கை வெட்டினர். மேலும், இந்த விழாவில் ஏராளமானோர் பங்பெற்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்