இந்தியாவின் அந்தஸ்து ஆறு ஆண்டுகளில் உயர்ந்துள்ளது

இந்தியாவின் அந்தஸ்து ஆறு ஆண்டுகளில் உயர்ந்துள்ளது

பாஜக இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெற்று இரண்டாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. அதை பாஜக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அனைத்து மொழிகளிலும் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்,

“என் சக இந்தியர்களே…

கடந்த ஆண்டு இந்த நாள் இந்திய ஜனநாயக வரலாற்றில் ஒரு பொன்னான அத்தியாயத்தைத் தொடங்கியது. பல தசாப்தங்களுக்குப் பிறகுதான் நாட்டு மக்கள் முழு பெரும்பான்மையுடன் முழுநேர அரசாங்கத்திற்கு வாக்களித்தனர். மீண்டும், இந்தியாவின் 130 கோடி மக்களுக்கும், நமது நாட்டின் ஜனநாயக நெறிமுறைகளுக்கும் நான் தலைவணங்குகிறேன்.

சாதாரண நேரங்களில், நான் உங்கள் முன்பு பேசியிருப்பேன்.இருப்பினும், தற்போதைய சூழ்நிலைகள் அதை அனுமதிக்கவில்லை. அதனால்தான் இந்த கடிதத்தின் மூலம் உங்கள் ஆசீர்வாதங்களை நாடுகிறேன்.

உங்கள் பாசம், நல்லெண்ணம் மற்றும் செயலில் ஒத்துழைப்பு ஆகியவை புதிய ஆற்றலையும் உத்வேகத்தையும் அளித்துள்ளன. ஜனநாயகத்தின் கூட்டு வலிமையை நீங்கள் வெளிப்படுத்திய விதம் முழு உலகிற்கும் வெளிச்சத்தை வழிகாட்டுகிறது. தனது 6 ஆண்டுகளில் இந்தியாவின் அந்தஸ்து உயர்ந்துள்ளது. லஞ்சம், மோசமான நிர்வாகம் ஆகியவற்றிலிருந்து நாடு வெளியே வந்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை ஏற்றம் கண்டுள்ளது. மக்கள் உதவியுடன் அனைத்து வளர்ச்சி பாதையிலும் நாடு வெற்றி நடைபோடுகிறது.

2016ஆம் ஆண்டு சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தி தீவிரவாத முகாம்கள் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே அழித்தோம். 2019ஆம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டுக்குள் உள்ள தீவிரவாத முகாம்கள் விமானப்படையால் குண்டு வீசி தகர்க்கப்பட்டன. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் மூலம் இந்திய நாட்டின் ஒற்றுமை மேலும் உறுதி செய்யப்பட்டது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்த அயோத்தி ராமர் கோயில் வழக்கு விரைவாக நடத்தி முடிக்கப்பட்டது. முத்தலாக் போன்ற மோசமான நடைமுறை ஒழிக்கப்பட்டது. குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக தேசிய அளவில் நடைபெற்ற போராட்டங்கள் இந்திய நாட்டின் பன்முகத் தன்மைக்கு ஒரு உதாரணம்.

ஒன்பதரை கோடி விவசாயிகளின் வங்கிக்கணக்கில் 72 ஆயிரம் கோடி ரூபாய் சேர்க்கப்பட்டுள்ளது. ஜல் ஜீவன் திட்டம் 15 கோடி கிராமப்புற வீடுகளுக்கு குழாய் இணைப்புகள் மூலம் குடிநீர் வழங்குவதை உறுதி செய்யும். நம் நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக, விவசாயிகள், பண்ணைத் தொழிலாளர்கள், சிறு கடைக்காரர்கள் மற்றும் அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு 60 வயதிற்குப் பிறகு வழக்கமான மாத ஓய்வூதியம் ரூ .3000 வழங்கப்படுவது உறுதி.

கொரோனாவை வீழ்த்தும் வெற்றிப்பாதையில் இந்தியா பயணிக்கிறது. இதுபோன்ற ஒரு மோசமான நோய் பாதிப்பு காலக்கட்டத்தில் எவரொருவரும் துன்பம் அடைய வில்லை என்று கூறிவிடமுடியாது. நமது தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், சிறு குறு தொழில் நடத்துவோர், தள்ளுவண்டி வியாபாரிகள் உள்ளிட்ட அடித்தட்டு மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார்கள்.

அதே நேரம் இதுபோன்ற சிக்கல்கள், துன்பங்கள் போன்றவை பேரிடராக மாறிவிடாமல் தடுப்பதற்கான போதிய கவனத்தை அரசு செலுத்தி வருகிறது. நமது நாடு நிறைய சவால்கள் மற்றும் சிரமங்களை சந்தித்து வருகிறது. விரைவில் பொருளாதார மீட்சியடைந்து உலகிற்கே உதாரணமாக திகழ்வோம். சட்டத்தையும் விதிமுறைகளையும் ஒவ்வொரு இந்தியரும் கடைபிடிக்க வேண்டும்.

கொரோனா நோய் தொற்றுக்கு எதிரான இந்த யுத்தத்தின்போது நீங்கள் ஒற்றுமை மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றை காப்பாற்றி, “ஒரே நாடு, சிறந்த நாடு” என்பதை நிரூபித்துக் காட்டி விட்டீர்கள்.”எனத் தெரிவித்துள்ளார்

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்