உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50% ஒதுக்கீடு..!

உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50% ஒதுக்கீடு..!

சென்னை:

உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கி வார்டு ஒதுக்கீடு பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கடந்த 2016ம் நடைபெறவிருந்த உள்ளாட்சி தேர்தல், வார்டு வரைமுறை தொடர்பாக முறைகேடு நடந்துள்ளதாக திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில், உள்ளாட்சி தேர்தலை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது.

இதனையடுத்து, உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகளை நியமித்து, 5 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் நிறைவடைந்தையொட்டி, ஜூலை 2வது வாரத்தில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தகவல் வெளியானது.

இந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு பட்டியலை தமிழக அரசு வெளியிட்டு அரசாணை பிறப்பித்துளளது. அதில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. பெண்களில் எஸ்சி., எஸ்டி., பிரிவினருக்கு மக்கள் தொகை அடிப்படையில் வார்டுகள் பங்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த ஒதுக்கீடு 10 ஆண்டுக்கு ஒரு முதறை சுழற்சி முறையில் மாற்றம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்