நற்செய்தி.. 5 கோடி வேலை வாய்ப்புகளுக்கான மத்திய அரசின் திட்டம்..!!!

நற்செய்தி.. 5 கோடி வேலை வாய்ப்புகளுக்கான மத்திய அரசின் திட்டம்..!!!

நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்தவும், வேலைவாய்ப்பை வலுப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேலையற்றவர்களுக்கு நற்செய்தியைச் செய்துள்ளார். இதற்கான திட்டத்தை மத்திய அரசு தயார் செய்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் (MSME ) 5 கோடி கூடுதல் வேலைவாய்ப்புகளை வழங்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது என்று கட்கரி (Nitin Gadkari) கூறுகிறார்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) MSME பங்களிப்பை சுமார் 30 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாகவும், ஏற்றுமதியில் 49 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாகவும் உயர்த்துவதே தனது குறிக்கோள் என்று MSME, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.தற்போது, ​​எம்.எஸ்.எம்.இ துறையில் சுமார் 1 ஒரு கோடியே பத்து மக்கள் பணியாற்றுகின்றனர்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் புதுமை முயற்சி மேற்கொள்பவர் மற்றும் தொழில்முனைவோருக்கு, அதிக அளவில் ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும் போது, திறமையானவர்கள் முன்னேற வாய்ப்புகள் கிடைக்கும் என்று கட்கரி கூறினார்.

புதன்கிழமை ஒரு மெய்நிகர் கூட்டத்தில் உரையாற்றிய கட்கரி, நிதி ஆயோக்கின் முன்முயற்சியான “Arise Atal New India Challenge” என்னும் திட்டத்தை பாராட்டினார். வெவ்வேறு பகுதிகளில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும், கூடுதல் ஆதாயம் கிடைப்பதை உறுதிப்படுத்தவும் அவர் வேண்டுகோள் விடுத்தார். உபரி அரிசியின் பயன்பாடு குறித்து குறிப்பிட்ட அவர், எத்தனால் உற்பத்தியில் உபரி அரிசியை பயன்படுத்தலாம் என்று கூறினார். இதனால் சேமிப்பு கிடங்கில் வைப்பதால் ஏற்படும் பிரச்சனை குறையும் என்பதோடு, சுற்றுசூழலை மாசுபடுத்தாத எரிபொருளூம் நாட்டிற்கு கிடைக்கும் என்றார்.

MSME என்பது நாட்டின் வளர்ச்சி இயந்திரம் என்றும் அத்துறையில் பல எதிர்பார்ப்புகள் உள்ளன என்றும் நிதின் கட்கரி கூறினார். இந்தத் துறையை மேம்படுத்துவதற்குத் தேவையான புதுமை முயற்சிகளை அடையாளம் கண்டு ஊக்குவிக்க இந்த திட்டம் உதவும் என்று தான் நம்புவதாக குறிப்பிட்டார். விஞ்ஞான ஆராய்ச்சி தொடர்பான பிரதமர் மோடியின் அணுகுமுறை பற்றி குறிப்பிட்ட அவர், சமூக-பொருளாதார பிரச்சினைகளை தீர்க்க அறிவியல் உதவ வேண்டும், அறிவியல் ஆராய்ச்சி ஆய்வகங்களிலிருந்து மக்களுக்கு பயன்படும் வகையில் எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்றார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்