மிக கனமழை நீடிக்கும்; வானிலை மையம் எச்சரிக்கை

மிக கனமழை நீடிக்கும்; வானிலை மையம் எச்சரிக்கை

புதுடெல்லி:

தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மேலும் 4 நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்றும் நாளையும் குஜராத், கேரளா, மாஹே கடலோர மற்றும் தெற்கு உள் கர்நாடகா, மத்திய மகாராஷ்டிரா, மேற்கு மத்திய பிரதேசம், கிழக்கு ராஜஸ்தான், கொங்கண், கோவா, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், தென்மேற்கு ராஜஸ்தான், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், வட உள் கர்நாடகா, விதர்பா, கிழக்கு மத்திய பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வடகிழக்கு, மத்திய மற்றும் தென்மேற்கு அரபிக் கடல் பகுதியிலும், அந்தமான், ஒடிசா மற்றும் மேற்குவங்க கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும் என தெரிவித்துள்ளது.

மேலும், ஆகஸ்ட் 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை இமாச்சல பிரதேசம் உத்தரகாண்ட், அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, குஜராத், கொன்கன், கோவா, கடலோர கர்நாடகா, கேரளா, மாஹே, லட்சத்தீவு, உத்தரப்பிரதேசம், புதுடெல்ல்லி, சண்டிகர் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்