4 சக்கர ஷேர் ஆட்டோக்களை இயக்கினால் அனுமதி ரத்து!

4 சக்கர ஷேர் ஆட்டோக்களை இயக்கினால் அனுமதி ரத்து!

விழுப்புரம்:

விழுப்புரம் நகரில், அனுமதியுடன் இயங்கும் ஷேர் ஆட்டோக்களை தவிர, அர்ஜூன் 500 ரக 4 சக்கர வாகனங்களை இயக்கினால் அனுமதி ரத்து செய்யப்படும் என்று விழுப்புரம் எஸ்.பி., தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், நான்கு சக்கர வாகன உரிமையாளர்களிடம் நடந்த பேச்சுவார்த்தை நடந்தது.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கூறியதாவது:

விழுப்புரம் நகர பகுதிகளில் அனுமதியுடன் இயங்கும் ஷேர் ஆட்டோக்களை தவிர மற்ற அர்ஜுன் 500 என்ற 4 சக்கர வாகனங்கள் நகர பகுதிகளில் பயணிகளை ஏற்றவோ இறக்கவோ அனுமதி கிடையாது.

மீறி போக்குவரத்துக்கு இடையூறாக அத்தகைய வாகனங்களை நகர பகுதியில் பயணிகளை ஏற்றி இறக்கினால், வாகனங்கள் சிறைப்பிடிக்கப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்படும். மேலும், வாகன உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார். உடன் டிஎஸ்பி திருமால், போக்குவரத்து ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர் இருந்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்