4 டன் அசைவ விருந்து

4 டன் அசைவ விருந்து

ஒசூர்:

ஒசூர் அருகே கோவில் திருவிழாவின் இறுதி நாளில் பக்தர்களுக்கு 4 டன் எடையிலான அசைவ விருந்து கொடுக்கப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையின் அருகில் அமைந்துள்ளது ஸ்ரீ சப்பலம்மா தேவி கோவில்,

சுமார் 200 ஆண்டுகளாக இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைப்பெறும் மாட்டுச்சந்தை திருவிழா மிகவும் பிரபலமானது.

இந்தாண்டு ஜனவரி 21 அன்று தொடங்கிய திருவிழாவில் மாடுகளை விற்கவும் வாங்கவும் ஆந்திரா,கேரளா,கர்நாடக, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலிருந்து வந்த மாடுகளின் விற்பனை கோடிக்கணக்கான ரூபாயில் வர்த்தகம் நடைப்பெற்றதாக கூறப்படும் நிலையில், திருவிழாவின் இறுதி நாளான இன்று காலை 10 மணி முதல் 4 டன் எடையிலான அசைவ விருந்து தொடர்ந்து சமைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

கோழி, ஆடு, பன்றி ஆகிய மாமிசங்கள் தனித்தனியாக சமைக்கப்பட்டு இன்று இரவு வரை பக்தர்களுக்கு விருந்து வைக்கின்றனர்.

காலை முதல் தொடங்கிய அசைவ விருந்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்