மாலை 4 மணி நிலவரப்படி தமிழகத்தின் நிலவரம்!

மாலை 4 மணி நிலவரப்படி தமிழகத்தின் நிலவரம்!

சென்னை:

மக்களவை தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட தமிழகத்தின் 39 தொகுதிகளில், திமுக கூட்டணி 37 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 2 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.

இடைத்தேர்தலை பொறுத்தவரை, மொத்தம் உள்ள 22 தொகுதிகளில், திமுக கூட்டணி 13 இடங்களிலும், அதிமுக கூட்டணி 9 இடங்களிலும் முன்னிலைபெற்று வருகிறது.

மேலும், சூலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கத்தசாமி 1,134 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையும், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சரவணணன் 3,111 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையும், தஞ்சாவூர் சட்டமன்ற இடைதேர்தலில் திமுக வேட்பாளர் நீலமேகம் 74,297 வாக்குகள் பெற்று வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளார்.

தர்மபுரி மக்களவை தொகுதியில், திமுக வேட்பாளர் எஸ்.செந்தில்குமார் 40,274 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். அன்புமணி ராமதாஸ் பின்னடைவை சந்தித்து வருகிறார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்