‘பாராசைட்’ படத்துக்கு 4 ஆஸ்கர்

‘பாராசைட்’ படத்துக்கு 4 ஆஸ்கர்

லாஸ்ஏஞ்சல்ஸ்:

சிறந்த படம் உள்ளிட்ட 4 ஆஸ்கர் விருதுகளை கொரியன் படமான ‘பாராசைட்’ பெற்றுள்ளது.

இந்த ஆண்டுக்கான 92வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் முதல் நிகழ்ச்சியாக ரெட்கார்பட் நிகழ்ச்சியில் நடிகர்கள், நடிகைகள் மற்றும் திரைத்துறையின் பல்வேறு கலைஞர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில், போங் ஜுன் ஹோ இயக்கிய ‘பாராசைட்’ திரைப்படம் 4 ஆஸ்கர் விருதுகளை அள்ளியது. சிறந்த திரைப்படம், திரைக்கதை, வெளிநாட்டு படம், இய க்குனர் ஆகிய 4 பிரிவுகளில் பாராசைட் படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது. ஆங்கில மொழி அல்லாத பிற மொழியில் எடுக்கப்பட்டு சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருதை பெற்ற முதல் திரைப்படம் என்ற பெருமையை கொரியன் படமான ‘பாராசைட்’ பெற்றுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்