30 விமானங்கள் ரத்து

30 விமானங்கள் ரத்து

மும்பை:

மும்பையில் பெய்து வரும் கனமழையால் 30 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மும்பையில் இரண்டாவது நாளாக பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், நேற்று இண்டிகோவின் 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. தொடர்ந்து பெய்துவந்த மழையால் 455 விமானங்கள் தாமதமாகின.

இந்நிலையில், இன்றும் ம¬யின் தாக்கம் அதிகரித்துள்ளதால், மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமானநிலையத்தில் இரண்டாவது நாளாக 30 விமானங்களை ரத்து செய்துள்ளன. மேலும் 118 விமானங்கள் தாமதமாகின.

இந்த சுமார் 1000 விமானங்கள் நாளொன்று வந்து செல்வது குறிப்பிடத்தக்கது. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்