ஆணா? பெண்ணா? 3 பேருக்கு வந்த ஆபத்து

ஆணா? பெண்ணா? 3 பேருக்கு வந்த ஆபத்து

குவாலியர்:

மத்திய பிரதேசத்தில் ஆணா அல்லது பெண்ணா என குழந்தைகளின் பாலினத்தை கூறிய 3 மருத்துவர்களுக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனையை நீதிமன்றம் விதித்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியரில், 10 ஆண்டுகளுக்கு முன் ‘பேட்டி பச்சாவோ சமிதி’ (Beti Bachao Samiti) அமைப்பு கருவில் உள்ள குழந்தைகளின் பாலினத்தை கூறும் மருத்துவர்களை கண்டுபிடிக்க ஆபரேஷன் ஒன்றை நடத்தியது.

இந்த ஆபரேஷனில், குவாலியரில் உள்ள மருத்துர்கள் சுஷாமா திரிவேதி, எஸ்.கே.ஸ்ரீவத்சவா, சந்தியா திவாரி ஆகியோர் தலா ரூ.2,500லிருந்து ரூ.3,000 வரை பெற்றுக்கொண்டு குழந்தைகளின் பாலினத்தை தெரிவித்து வந்ததது கண்டுபிடித்தனர்.

இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்ட நிலையில், 3 மருத்துவர்களுக்கும் 3 ஆண்டு சிறை தண்டனையும், அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்