சபாநாயகருக்கு எதிரான வழக்கு; 3 எம்எல்ஏக்கள் வாபஸ்!

சபாநாயகருக்கு எதிரான வழக்கு; 3 எம்எல்ஏக்கள் வாபஸ்!

சென்னை:

டிடிவி தினகரன் ஆதரவாளராக இருந்த அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேரும் சபாநாயகர் நோட்டீஸ் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றத்தில் வாபஸ் பெற்றுள்ளனர்.

அதிமுக எம்எல்ஏக்களான பிரபு, ரத்தினசபாபதி மற்றும் கலைச்செல்வன் ஆகியோர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டுவந்தனர். கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக 3 எம்எல்ஏக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி அரசு கொறடா சபாநாயகரிடம் புகார் அளித்தார்.

இதனைத்தொடர்ந்து 3 எம்எல்ஏக்களுக்கும் சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசார¬ணையில் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணை ஜூலை 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதனையடுத்து, நடந்து முடிந்த சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் அமமுக பெரும் பின்னடைவைத் தொடர்ந்து, 3 எம்எல்ஏக்களும் முதல்வரை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை திரும்பப் பெறவுள்ளதாக மூவரும் கடந்த 26ம் தேதி தெரிவித்தனர். இந்நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் பிரபு, கலைச்செல்வன், ரத்தினசபாபதி ஆகியோர் இன்று உச்சநீதிமன்றத்தில் வாபஸ் பெற்றனர்.

இதனையடுத்து 3 பேர் மீதான நடவடிக்கையை சபாநாயகர் கைவிட அதிமுக தலைமை சார்பாக அரசு கொறடா ராஜேந்திரன் வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்