2021 வரை வீட்டிலிருந்து வேலை செய்ய உத்தரவிட்ட முன்னணி IT நிறுவனங்கள் !!

2021 வரை வீட்டிலிருந்து வேலை செய்ய உத்தரவிட்ட முன்னணி IT நிறுவனங்கள் !!

உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரானா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல தொழில்கள் படுத்துவிட்டன. IT ஊழியர்கள் வீட்டிலிருந்தபடியே வேலை செய்யலாம் என பல நிறுவனங்கள் வசதிகள் ஏற்படுத்தி கொடுத்தது. இந்த நிலை தற்போது வரை தொடர்ந்து வருகிறது.

உலகின் முன்னணி IT நிறுவனமான கூகுள் நிறுவனம் அதன் ஊழியர்கள் வீட்டிலிருந்த படி வேலை செய்வதை நீடிக்க முடிவு செய்துள்ளது. கூகுள் மற்றும் ஆல்பபெட் நிறுவனங்கள் இது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதில், “கொரோனா காரணமாக தற்போது பணியாளர்களால் வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய முடியும் என்ற நிலையில் இருப்பவர்களுக்கு, வீட்டிலிருந்தே பணியாற்றும் காலத்தை வரும் 2021 ம் ஆண்டு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தனது ஊழியர்களுக்கு E-,mail வாயிலாக தகவல் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்