2000 நோட்டு அச்சடிப்பு நிறுத்தம்

2000 நோட்டு அச்சடிப்பு நிறுத்தம்

டெல்லி:
நடப்பு ஆண்டில் 2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சிடுவது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று ரிசர்வ் வங்கியிடம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் 2000 ரூபாய் நோட்டுக்களின் புழக்கம் குறைந்துள்ளது பற்றி கேள்வி எழுப்பியது.

இதற்கு ரிசர்வ் வங்கி அளித்த பதிலில், 2017-18-ம் நிதியாண்டில் சுமார் 11 கோடி எண்ணிக்கையிலான 2000 ரூபாய் தாள்களும், கடந்த நிதியாண்டில் 4 கோடி எண்ணிக்கையிலான 2 ஆயிரம் ரூபாய் தாள் மட்டுமே அச்சிடப்பட்டதாக தெரிவித்துள்ளது.

மேலும், நடப்பு நிதியாண்டில் இதுவரை ஒரு 2000 ரூபாய் தாள் கூட அச்சிடப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்