ஒசூரில் 200 பேர் கைது

ஒசூரில் 200 பேர் கைது

ஒசூர்:

ஒசூரில், வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டோர் சாலை மறியலை ஈடுபட முயன்றதால் 200 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மத்திய அரசின் தவறான திட்டங்களினால், பொருளாதார வீழ்ச்சி ஏற்ப்பட்டு அதை நியாயப்படுத்தும் வகையில் பொதுத்துறைகளை தனியார்துறையில் ஒப்படைக்க மத்திய அரசு முயற்சிப்பதாக பொதுத்துறை ஊழியர்கள், தொழிற்சங்கங்களின் சார்பில் இன்று நாடு முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

தமிழக – கர்நாடக மாநில எல்லையான ஒசூரில் வேலைநிறுத்த போராட்டத்தினால் பாதிப்பும் ஏற்படவில்லை போக்குவரத்து சேவை, வங்கிகள்,பள்ளி கல்லூரிகள்,வணிக கடைகள் என அனைத்தும் வழக்கம் போல செயல்பட்டு வருகின்றன.

தொமுச,எஐடியூசி, சிஐடியு, அங்கன்வாடி ஊழியர்களின் சங்கம் உள்ளிட்ட தொழிலாளர் அமைப்புக்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் ஒசூரில் உள்ள காந்தி சிலை முன்பு தனியார்துறைக்கு பொதுத்துறைகளை ஒப்படைப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் சாலையில் அமர்ந்து மறியலில் செய்ய முயன்றதால் 200க்கும் மேற்ப்பட்டோரை போலிசார் கைது செய்து தனியார் மன்டபதில் அடைத்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்