19,409 சமூக வலைத்தள பதிவுகள் நீக்கம்

19,409 சமூக வலைத்தள பதிவுகள் நீக்கம்

லக்னோ:

உத்தரப்பிரதேசத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்க எதிராக பதிவிட்ட 19,409 சமூக வலைத்தள பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக உத்தரப்பிரதேச காவல் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உத்தரப்பிரதேச காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்தரபிரதேச காவல்துறை: சமூக ஊடகங்களில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கலவரத்தை தூண்ட காரணமான சமூக வலைத்தள பதிவுகளை வெளியிட்ட 124 பேர் கைது செய்யப்பட்டனர். 93 எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், 19,409 சமூக வலைத்தள பதிவுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளது எனவும், இதில், 9,372 டுவிட்டர், 9,856 பேஸ்புக் மற்றும் 181 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன என உத்தரப்பிரதேச காவல் துறை தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்