பயங்கரவாதிகளுக்கு பணம் திரட்டிய 14 பேர் டெல்லியில் கைது..!

பயங்கரவாதிகளுக்கு பணம் திரட்டிய 14 பேர் டெல்லியில் கைது..!

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு இலங்கையில் தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதலை நடத்தியது. இதில் 300க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியானார்கள்.

இந்த தாக்குதலை நிகழ்த்திய பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் இந்தியாவில் சிலருக்கு தொடர்பு இருப்பதாக இலங்கை உளவுத்துறை தெரிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து கேரளாவிலும், தமிழகத்திலும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி பலரை கைது செய்தனர்.

இந்நிலையில், 2 நாட்களுக்கு முன் சென்னை வந்த தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிகாரிகள் குழு, மண்ணடி லிங்கி செட்டி தெருவில் உள்ள இஸ்லாமிக் ஹிண்ட் என்ற அமைப்பின் அலுவலகத்தில் சோதனை நடத்தியது.

இது போல் புரசைவாக்கத்தில் இஸ்லாமிய அமைப்பின் மாநில தலைவர் முகமது புகாரி வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர்.

அந்த அமைப்பைச் சேர்ந்த சிலர், கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் தொடர்பில் இருப்பதாக தெரியவந்தது.

அதேபோல் நாகப்பட்டினத்தில் ஹாரீஸ் முகமது ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.
இந்த சோதனையின் அடிப்படையில் கிடைத்த தகவல் படி தேசிய புலனாய்வு அமைப்பினர் டெல்லியில் 14 பேரை கைது செய்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்