14 காங்., எம்எல்ஏக்கள் கட்சியிலிருந்து நீக்கம்

14 காங்., எம்எல்ஏக்கள் கட்சியிலிருந்து நீக்கம்

பெங்களூரு:

கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களான காங்கிரசை சேர்ந்த 14 பேரை கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 14 பேர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு மும்பையில் முகாமிட்டனர். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற காங்கிரஸ் மஜத கூட்டணியின் முதல்வரான குமாரசாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

இதனால், குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தார். இதனையடுத்து, பா.ஜ.,வின் எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றார்.

பின்னர், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 14 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவிட்டார். இந்நிலையில், கூட்டணி அரசுக்கு எதிராக செயல்பட்டதையடுத்து, கட்சிக்கு விரோதமாக நடந்துகொண்டதால் அவர்களை கட்சியிலிருந்து நீக்குவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளார் வேணுகோபால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்