வலிமை ஷூட்டிங் ஏன் தாமதமாக நடைபெறுகிறது தெரியுமா வெளியான அதிர்ச்சி உண்மை

  • In Cinema
  • February 16, 2020
  • 387 Views
வலிமை ஷூட்டிங் ஏன் தாமதமாக நடைபெறுகிறது தெரியுமா வெளியான அதிர்ச்சி உண்மை

எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் அவர்கள் இரண்டாம் முறையாக நடித்து கொண்டிருக்கும் படம் வலிமை.

இப்படத்தில் பாலிவுட் நடிகை உமா குரேஷி மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்படிப்பதில் அஜித் அவர்களுக்கு யார் வில்லனாக நடிக்கவுள்ளார் என்று ரசிகர்கள் இணையத்தில் கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது 12 வருடத்திற்கு முன்பு ஏகன் படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்திருந்த நடிகர் நவதீப் தான் வலிமை படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்கவுள்ளதாக சில தகவல்கள் கசிந்துள்ளது.

மேலும் இதனை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வரும் வரை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகிவரும் “வலிமை” திரைப்படத்தின் சூட்டிங் ஆரம்பித்து விட்டது. ஆனால், படப்பிடிப்பு நடக்கிறதா..? இல்லையா..? என்று தெரியவில்லை.

இந்நிலையில், பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர், நடிகர் அஜித் தற்போது ஹெலிகேம் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் எனவும், மார்ச் மாதத்திற்கு பிறகு தான் தன்னுடைய முழு கால்ஷீட்டையும் கொடுத்துள்ளார் எனவும் கூறியுள்ளார்.

மேலும், இடையில் நேரம் கிடைத்தால் நடித்து கொடுக்கிறேன் என்றும் கூறியுள்ளாராம். இதனால், இந்த மாதம் முழுதும் படத்தில் இருந்து எந்த ஒரு அப்டேட்டும் வராது என கூறுகிறார்கள்.

படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு தான் ரிலீஸ் ஆகிறது என்பதால் வேக வேகமாக படப்பிடிப்பு நடத்த வேண்டிய அவசியம் இல்லை.என்றாலும், வலிமை படம் தற்போது அந்தரத்தில் நிற்கிறது என்பது தான் லேட்டஸ்ட் அப்டேடாக உள்ளது.

 

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்