தீவிரமடைந்த CAA எதிர்ப்பு போராட்டம் – தமிழக முதல்வருடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் ஆலோசனை!

தீவிரமடைந்த CAA எதிர்ப்பு போராட்டம் – தமிழக முதல்வருடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் ஆலோசனை!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் தமிழக டிஜிபி திரிபாதி மற்றும் சென்னை காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் ஆகியோர் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த ஆலோசனை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் அரை மணி நேரத்துக்கும் அதிகமாக நடைபெற்றது.

முன்னதாக தமிழகத்தில் நடைபெற்று வரும் குடியுரிமை திருத்தச் சட்ட போராட்டங்களை கண்காணிக்கவும், சட்டம் – ஒழுங்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதற்காக 6 ஐபிஎஸ் சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.திண்டுக்கல்லுக்கு ஜி.ஸ்டாலின், தேனிக்கு பாஸ்கரன், தூத்துக்குடிக்கு மகேந்திரன், மதுரைக்கு அபய்குமார் சிங், நெல்லைக்கு மகேஷ்குமார் அகர்வால், முருகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த 6 அதிகாரிகளையும் சட்டம் – ஒழுங்கு ஏடிஜிபி ஒருங்கிணைத்து செயல்படுத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த திங்கள் கிழமை குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின் போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு தடியடியில் முடிவடைந்தது. இதையடுத்து போராட்டம் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.,

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்