ஒசூர் அருகே சமூக ஆர்வலர்கள் ஏழை, எளிய குடும்பங்களுக்கு ஒருவார தேவைக்கான மளிகைப்பொருட்களை வழங்கினர்

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பகுதிகளில் ஏராளமானோரின் வாழ்வாதாரமாக பல்லாயிரக்கணக்கான தொழிற்சாலைகளை நம்பி இருந்த நிலையில்,

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்,

அன்னாடங்காட்சிகள், தினக்கூலிகள் கடந்த 10 நாட்களாக வருவாயின்றி திடீரென அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் உணவு பொருட்கள் இல்லாமல் அவதிப்பட்டு வருவதையடுத்து

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருடன் இனைந்து சில்வர் லீப், அரீஷ் கண்ஸ்டிரக்சன் ஆகிய நிறுவனத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள்

ஒசூர் அடுத்த காரப்பள்ளி கிராமத்தில் உள்ள 100 க்கும் அதிகமான நடுத்தர குடும்பத்தினருக்கு ஒருவாரத்திற்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கினர்.

இதில் கர்நாடக மாநில விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொருப்பாளர் சந்தோஷ்குமார் சமூக ஆர்வலர்கள் ஹரீஷ், சக்தி ஆகியோர் பங்கேற்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்