போலீஸ் லத்தி சார்ஜ்..! கைக்குழந்தையுடன் தம்பதி கதி..!!

போலீஸ் லத்தி சார்ஜ்..! கைக்குழந்தையுடன் தம்பதி கதி..!!

மதுரை:

மதுரையில் வியாபாரி விவேகானந்த குமார் கடந்த 15ம் தேதி இரண்டு சக்கர வாகனத்தில் சென்றபோது போலீசார் லத்தி வீசி தாக்கியதில் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், விவேகானந்த குமாரின் மனைவி கஜபிரியாவும், கணவரின் மரணத்தை தாங்கி கொள்ள முடியாமல் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் கஜபிரியா மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவர்களுடைய ஒன்றரை வயது ஆண் குழந்தை சாய் அவின். எப்போதும் பெற்றோரின் அரவணைப்பில் இருந்த இந்த குழந்தை தற்போது உறவினர்களின் கைகளில் அழுதுகொண்டே உள்ளது.

தந்தை உயிரிழந்து விட்டார். தாயும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது கூட தெரியாமல் தாய், தந்தையை காணாமல் உறவினர்களிடம் சாய் அவின் அழுது கொண்டே இருப்பது பார்ப்பவர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்