குமாரசாமி முதல்வராக தொடர்வாரா.? இன்று ஓட்டெடுப்பு..!

குமாரசாமி முதல்வராக தொடர்வாரா.? இன்று ஓட்டெடுப்பு..!

பெங்களூரு:

கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கூட்டணி அரசு பதவி ஏற்றதில் இருந்து தற்போது வரைக்கும் பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.

இந்நிலையில், ஆளும் கூட்டணியை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் அலுவலகத்தில் தங்களது ராஜினாமா கடிதங்களை கொடுத்தனர். ஆனால் அதனை சபாநாயகர் ரமேஷ்குமார் ஏற்கவில்லை.

இதனையடுத்து தங்களது எம்.எல்.ஏ., ராஜினாமா கடிதம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு விசாரித்த நீதிபதி தீர்ப்பு அளித்தார். அதில் சபாநாயகர் ராஜினாமா பற்றி முடிவு எடுக்க சுதந்திரமாக செயல்படலாம் என்று கூறினர்.

இந்நிலையில், இன்று உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும். இதில் குமாரசாமி அரசுக்கு மெஜாரிட்டி இருக்கா இல்லையா என்று தெரிந்து விடும்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்