சென்னைக்கு புறப்பட்டது குடிநீர் ரயில்..!

சென்னைக்கு புறப்பட்டது குடிநீர் ரயில்..!

சென்னை:

சென்னையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனை சமாளிக்க வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள காவிரி கூட்டு குடிநீர் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் இருந்து சென்னைக்கு ரயிலில் குடிநீர் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. இதற்காக அரசு ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை முடுக்கி விட்டது.

அதன்படி குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், ஊழியர்கள், மற்றும் ரயில்வே ஊழியர்கள் கடந்த 10 நாட்களாக தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் தற்போது பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று ரயில் மூலம் தண்ணீர் அனுப்பப்பட்டது.

50 வேகன்களில் தலா 25 லட்சம் லிட்டர் தண்ணீர் என மொத்தம் 25 லட்சம் லிட்டர் தண்ணீர் ஏற்றப்பட்ட முதல் ரயில் இன்று காலை ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது.
தமிழ்நாடு குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநர் மகேஷ் கொடியசைத்து குடிநீர் ரெயிலை தொடங்கி வைத்தார்.

இந்த ரயில் சென்னையில் உள்ள வில்லிவாக்கத்துக்கு மதியம் சுமார் 1 மணியளவில் சென்று சேரும். அப்போது ரயிலை வரவேற்பதற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்பார் என்று தகவல் தெரிவிக்கின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்