சுவர் இடிந்து குழந்தை பலி

சுவர் இடிந்து குழந்தை பலி

ஒசூர்:

ஓசூரை அடுத்த கோட்டையூர் அருகே தொகுப்பு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த தளி தொகுதிக்குபட்ட கோட்டையூர் ஊராட்சிக்கு உள்பட்ட பெரிய மல்லஹள்ளி கிராமத்தில் நள்ளிரவில் தொகுப்பு வீட்டின் சுவர் விழுந்து 2 வயது குழைந்தை அஜித்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஒசூர் அடுத்த தளி தொகுதிக்குள்பட்ட கோட்டையூர் ஊராட்சிக்கு உள்பட்ட பெரிய மல்லஹள்ளி கிராமம். இங்கு வாழும் ஆதிதிராவிடர் இனமக்களுக்கு கடந்த 2003 & 2004 ஆம் ஆண்டில் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தில் 27 தொகுப்பு வீடுகள் தமிழக அரசின் மூலம் கட்டி கொடுக்கப்பட்டன.

நாளடைவில் சரியான பராமரிப்பு இல்லாததால் வீடுகளின் சுவர்களில் விரிசல் விழுந்து, வீட்டின் மேல் தளம் இடிந்து விழுந்து அந்த வீடுகளில் மக்கள் யாரும் வசிக்க முடியாத நிலையில் உள்ளது.

மேலும் இந்த தொகுப்பு வீடுகளில் மக்கள் யாரும் குடியிருக்கவில்லை என்பதால் எந்த ஒரு பராமரிப்பும் இல்லாமல் தினந்தோறும் இடிந்து விழுகிறது. வீடுகளை சுற்றி புதர் மண்டி கிடப்பதால் தொகுப்பு வீடுகளில் பாம்புகள், விஷப்பூச்சிகள் தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்பதால் பெரும்பாலானோர் குழந்தைகள், வயதானவர்கள் என குடும்பத்துடன் வாழும் பொதுமக்கள் அனைவரும் வீடுகளை இழந்து அதரவற்ற நிலையில் நிர்கதியாக நிற்கின்ற இவர்கள் வேறு வழியின்றி அருகிலுள்ள வனப்பகுதிக்கு சென்று விஷ ஜந்துக்கள் மத்தியில் உயிரை கையில் பிடித்த நிலையில் குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.

மேலும் சிலர் வேறு வழியின்றி அங்கேயே தங்கி இரவு நேரங்களில் வீட்டின் வெளியே உறங்குகின்றனர். இந்நிலையில், ரங்கசாமி தன் குடும்பத்துடன் இரவு வீட்டின் வெளியில் உறங்குகி கொண்டிருந்தார் அப்போது நள்ளிரவில் திடிரென சுவர் இடிந்து அருகில் உறங்கிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை மீது விழுந்தது, குழந்தையில் அலறல் சதம் கேட்டு ரங்கசாமி எழுந்து விழுந்த சுவரை அகற்றிவிட்டு குழந்தையை தூக்கும்போது அந்த குழந்தை பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தது.

இந்த சம்பவத்தால், அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தி உள்ளது. இனியாவது இந்த அவலம் நிலை தொடராமல் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதியினர் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்