காதல் ஜோடி எஸ்.பி., அலுவலகத்தில் தஞ்சம்.!

காதல் ஜோடி எஸ்.பி., அலுவலகத்தில் தஞ்சம்.!

தர்மபுரி:

கிருஷ்ணகிரி மாவட்டம், பணங்காமட்லு பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி, இவரது மகன் விஜய் 25, கார் டிரைவராக உள்ளார்.

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அப்துல் ஹரிப் என்பவரின் மகள் ஹர்ஷியா பானு 19, என்பவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

இவர்கள் காதலுக்கு ஹர்ஷியா பானு குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து ஹர்ஷியா பானு மற்றும் விஜய் இருவரும் கிருஷ்ணகிரி மாவட்டம் குன்னத்தூரில் உள்ள பிள்ளையார் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

இதன் பின்னர் இருவரும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தர்மபுரி போலீஸ் எஸ்.பி., அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் ஹர்ஷியா பானு தெரிவித்திருப்பதாவது: நான் எங்கள் பகுதியை சேர்ந்த விஜய் என்பவரை காதலித்து வருகிறேன்.

ஆனால் இதற்கு எங்கள் வீட்டின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே நாங்கள் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டோம். எனவே எங்களுக்கு, எனது பெற்றோரிடம் இருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்