முதல் பெயரில் உருவான நகர் “எடப்பாடியார் நகர்”

முதல் பெயரில் உருவான நகர் “எடப்பாடியார் நகர்”

ஏற்கனவே தமிழகம் முழுக்க பல நகரங்களில் கருணாநிதி பெயரிலும் ஜெயலலிதா பெயரிலும் அண்ணாதுரை பெயரிலும் நகர்கள் உள்ளன. அதைப் பின்பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெயரிலும் ஒரு நகர் உருவாக்கப்பட்டு அதை ஒரு எம்எல்ஏ திறந்து வைத்திருக்கிறார்.தமிழகத்தில் குடியிருப்பு பகுதி, தெரு என தேசிய தலைவர்கள் அல்லது அரசியல் தலைவர்கள் பெயர் சூட்டுவது வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில் தமிழகத்தில் முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, அண்ணாதுரை, எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோர் பெயர்களுடன் நகர்கள் உள்ளன.இந்நிலையில், தமிழகத்தில் முதல் முறையாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெயரிலும் புதிய நகர் உருவாகியுள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதிக்குட்பட்ட தோப்புப்பாளையம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் அடங்கிய புதிய குடியிருப்பு பகுதி உருவாக்கப்பட்டது.இந்த நகருக்கு “எடப்பாடியார் நகர்” என எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம் பெயர் சூட்டி திறந்து வைத்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்