சித்தார்த்தை ஏன் பிரிந்தேன்! சைதன்யா காதல் பற்றி மனம் திறந்த சமந்தா!

  • In Cinema
  • March 19, 2020
  • 160 Views
சித்தார்த்தை ஏன் பிரிந்தேன்! சைதன்யா காதல் பற்றி மனம் திறந்த சமந்தா!

இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று கூறப்பட்ட நிலையில் பிரிந்து விட்டனர். இந்நிலையில் பேட்டி ஒன்றில் தன் கணவர் மற்றும் முன்னாள் காதலரான சித்தார்த் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார் சமந்தா.

சாவித்ரி போன்று நானும் தனிப்பட்ட வாழ்க்கையில் பெரிய பிரச்சனையில் சிக்கியிருப்பேன். ஆனால் நல்ல வேளையாக நான் ஆரம்பத்திலேயே சுதாரித்துக் கொண்டு அந்த உறவில் இருந்து வெளியேறிவிட்டேன். அந்த காதல் எனக்கு நல்லது அல்ல என்பதை உணர்ந்த பிறகே பிரிந்துவிட்டேன். என் வாழ்வில் நாக சைதன்யா வந்ததற்கு நான் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன் என்று சமந்தா தெரிவித்துள்ளார்.

திருமணமாகி இத்தனை ஆண்டுகளாக சித்தார்த் பற்றி பேசாத சமந்தா தற்போது ஏன் பேச வேண்டும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சமந்தா தனது கெரியர் பிக்கப் ஆனதும் அதிக கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தது தான் அவருக்கும், சித்தார்த்துக்கும் இடையே பிரச்சனை ஏற்படக் காரணம் என்று கூறப்பட்டது. சமந்தாவை பிரிந்த பிறகு சித்தார்த் இன்னும் சிங்கிளாகத் தான் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்