நியூ., எதிராக இந்தியா வெற்றி

  • In Sports
  • January 24, 2020
  • 188 Views
நியூ., எதிராக இந்தியா வெற்றி

ஆக்லாந்து:

நியூசிலாந்துக்கு எதிரான டி20 முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி டி20 தொடராக 5 போட்டிகளில் நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது. முதல் போட்டி ஆக்லாந்தில் உள்ள மைத £னத்தில் இன்று நடைபெறுகிறது.

முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து நியூசிலாந்து அணி பேட்டிங்கில் களமிறங்கியது. இதில், நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்களை குவித்தது.

இதனையடுத்து, 204 ரன்கள் இலக்காக களமிறங்கிய இந்திய அணி, தொடக்கத்தில் ரோகித் சர்மா 7 ரன்களில் அவுட்டானார். கே.எல்.ராகுல் 56 ரன்களுடனும், கோலி 45 ரன்களுடனும் அவுட்டாகினர். சிவம் துபே 13 ரன்களில் அவுட்டானார். எஸ்.எஸ்.ஐயர் 58 ரன்களிலும், பாண்டே 14 ரன்களிலும் அவுட்டாகாமல் இருந்தனர்.

இந்நிலையில், 19 ஓவர்களில் 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியினர் தந்த இலக்கை 204 ரன்கள் எடுத்து இந்திய அணி அபார வெற்றியை பெற்றது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்