வெங்காயத்துக்கு ‘கியூ’; பரிதாப ‘ஹார்ட் அட்டாக்’

வெங்காயத்துக்கு ‘கியூ’; பரிதாப ‘ஹார்ட் அட்டாக்’

ஆந்திரா:

ஆந்திர மாநிலத்தில் வெங்காயம் வாங்க நீண்ட வரிசையில் நின்ற ஒருவர் மாரடைப்பில் பலியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடுமுழுவதும் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதையடுத்து, பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வெங்காயத்தின் தற்போது வெளி சந்தையில் ரூ.200 வரை உயர்ந்துள்ள நிலையில், ஆந்திர மாநில அரசு மானிய விலையில் ரூ.25க்கு விற்பனை செய்யும் அரசு சார்பில் கடைகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில், ஆந்திரா மாநிலம், குடிவாடாவில் உள்ள ரைட் பஜாரில் அமைக்கப்பட்டிருந்த வெங்காய கடையில் ரூ.25க்கு வெங்காயம் வாங்க நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர். அந்த வரிசையில் மணிக்கணக்கில் காத்திருந்த முதியவர் ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக குடிவாடா டூடவுன் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பண மதப்பிழப்பின் போது இதேபோல், வங்கிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து வயதானவர்கள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்