சிலம்பத்தில் மாணவி உலக சாதனை

  • In Sports
  • November 12, 2019
  • 230 Views
சிலம்பத்தில் மாணவி உலக சாதனை

ஒசூர்:

சூளகிரி மாணவி ஸ்வேதா ஸ்ரீ, சிலம்பத்தில் உலக சாதனை படைத்து பெருமைப்படுத்தியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் இந்தியன் கிங் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் குங்ஃபூ, சிலம்பம் மற்றும் வில்வித்தை இது போன்ற கலைகளை பயிற்சியாளர் பவித்ராமன் அவர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் பயிற்சியாளர் திரு. பவித்ராமன் வயது 30, மனைவி அனிதா வயது 27, ஸ்வேதா ஸ்ரீ வயது 5, மேகா ஸ்ரீ வயது 3. அவர்களின் முத்த மகளான ஸ்வேதா ஸ்ரீ என்ற மாணவி 8 மாதங்களாக பயிற்சி பெற்று பல்வேறு பதக்கங்களை வென்று சிலம்பத்தில் உலக இளம் வயது சாதனையாளருக்கான விருதை பெற்றுள்ளார்.

இவர் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் முதல் இடத்தையும், ஈரோட்டில் உலக சிலம்ப விளையாட்டு சங்கம் நடத்திய மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் முதலிடத்தையும் மற்றும் கோவாவில் யூத் ஓவர் ஆல் கேம்ஸ் அசோசியேசன் நடத்திய தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் முதலிடத்தையும் பெற்றுள்ளார்.
மேலும், சேலத்தில் நடைபெற்ற உலக அளவிலான சிலம்பப் போட்டியில் முதல் பரிசை வென்று தங்க நாணயத்தை பரிசாகப் பெற்றுள்ளார், மேலும் இதுபோன்று பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு தொடர்ந்து முதலிடத்தை பெற்றிருப்பதால் சிலம்பத்தில் இளம்வயது சாதனையாளருக்கான அங்கிகாரம் ‘பிரேவோ இன்டர்நேஷனல் புக் ஆப் வோல்டு ரெக்கார்ட்’ புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

இவரின் திறமையை பாராட்டி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகரன் மற்றும் சூளகிரி வட்டாட்சியர் ரெஜினா ஆகியோர் மாணவிக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்