தமிழ் பெயர்களுக்கு கிண்டல்.. கே.வி.ஆனந்த் வருத்தம்

  • In Cinema
  • September 16, 2019
  • 184 Views
தமிழ் பெயர்களுக்கு கிண்டல்.. கே.வி.ஆனந்த் வருத்தம்

சென்னை:
தமிழ் சினிமாவை பொறுத்தவரை தமிழில் தலைப்புகளை வைக்கும் இயக்குனர்கள், கே.வி.ஆனந்த், கவுதம் மேனன் மட்டுமே.

கவுதம் மேனன் மலையாளம் என்றாலும், தமிழ் பற்றுடன் அழகான பெயர்களை தன்னோட படத்திற்கு வைப்பார்.

கே.வி.ஆனந்த் தமிழில் வைத்த படங்கள், கனா கண்டேன், அயன், கோ, மாற்றான், அனேகன், கவண், காப்பான் ஆகும்.

இப்படி தமிழில் பெயர் வைத்ததற்கு சிலர் கிண்டல் செய்தார்கள் என்கிறார் கே.வி.ஆனந்த்.

கோ என்று பெயர் வைத்தபோது பசுமாட்டை வைத்து படம் எடுக்கிறீர்களா என்று கிண்டல், கேலி செய்தனர் என்று வருத்தப்படுகிறார் கே.வி.ஆனந்த்.

தற்போது உள்ள தமிழ் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைப்பவர்கள் ஒரு சிலரே. அவர்களையும் வைக்கவிடாமல் செய்து விடுவார்கள் என்று தெரிகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்