‘இந்தியன்2’ தயாரிப்பு நிறுவனம் மாற்றம்..? படப்பிடிப்பு மீண்டும் துவங்குகிறது..!!

  • In Cinema
  • May 15, 2019
  • 226 Views
‘இந்தியன்2’ தயாரிப்பு நிறுவனம் மாற்றம்..? படப்பிடிப்பு மீண்டும் துவங்குகிறது..!!

சென்னை:

கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இந்தியன்2’ படப்பிடிப்பு பாதியில் நிற்கும் நிலையில், தற்போது வேறொரு தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் விரைவில் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் பிசியாக உள்ளதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், தேர்தல் முடிந்தும் இன்னும் படபிடிப்பு துவங்கப்படவில்லை. படத்தை தயாரித்த லைகா புரடக்ஷன்ஸ் பின்வாங்கியதால், படத்தை வேறொரு நிறுவனத்¬தை வைத்து தயாரிக்க பிரபல நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்நிலையில், ரிலையன்ஸ் அல்லது சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்