சுவிஸ் வங்கியில் ரூ.7 கோடி..! காங்., வேட்பாளர் வாக்குமூலம்..!!

சுவிஸ் வங்கியில் ரூ.7 கோடி..! காங்., வேட்பாளர் வாக்குமூலம்..!!

புதுடெல்லி:

காங்கிரஸ் வேட்பாளர் சுனில் குமார் ஜாக்கர், தன்னுடைய மனைவி பெயரில் சுவிஸ் வங்கியில் ரூ.7 கோடி வைப்பு நிதியாக வைத்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் குர்தாஸ் பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக சுனில்குமார் ஜாக்கர் போட்டியிடுகிறார். இவர் முன்னாள் லோக்சபா சபாநாயகராக இருந்த பல்ராம் ஜாக்கர் மகன்.

இவர் தேர்தல் கமிஷனிடம் அளித்த சொத்து விவரப்பட்டியலில், தனக்கு ரூ.2 கோடி 88 லட்சம் மதிப்புள்ள அசையாக சொத்துக்களும், ஒரு கோடியே 53 லட்சம் மதிப்பு அசையும் சொத்தும், தன்னுடைய மனைவி சில்வியா பெயரில் சுவிஸ் நாட்டில் ஜூரிச் நகரின் ஜூஜெர் கன்டோனல் வங்கியில் ரூ.7 கோடியே 37 லட்சம் வைப்பு நிதியாக வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்