தானே பிரசவம்; சாலையில் பரிதாபம்

தானே பிரசவம்; சாலையில் பரிதாபம்

புர்ஹான்பூர்:

மத்திய பிரதேசத்தில் ஆம்புலன்ஸ் வராததால், கர்ப்பிணி ஒருவர், தன்னந்தனியாக சாலையிலேயே பெண் குழந்தையை பெற்றெடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம், புர்ஹான்பூர் அருகே கம்லா பாய் என்ற கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் நீண்ட நேரம் ஆகியயும் ஆம்புலன்ஸ் வராததால், அவரது கணவர் இரு சக்கர வாகனத்தில் அழைத்துச்சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, பாதி வழியிலேயே சாலையின் ஓரம் கம்லா பாய் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். சாலையின் ஓரம் தன்னந்தனியே பெற்றெடுத்த குழந்தையுடன் அருகில் உள்ள ஷாப்பூர் சமூக சுகாதார மையத்துக்கு சென்றதால் உடனடியாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

தாயும் சேயும் நன்றாக உள்ளதாக அந்த மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்