பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடுவதில் சிக்கல் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடுவதில் சிக்கல் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

ஈரோடு மாவட்டம் கோபியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல் உள்ளது. கொரோனா பரவியதால் 35 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. மீண்டும் தேர்வு எழுத விருப்பம் உள்ளதா? என அவர்களுக்கு கடிதம் மூலம் கேட்கப்பட்டபோது 718 பேர் மட்டும் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்து உள்ளனர். அவர்களுக்கு தேர்வு வைத்த பின்னரே முடிவு வெளியிடப்படும். மீண்டும் பஸ் இயங்கினால் மட்டுமே அவர்களுக்கு தேர்வு வைக்க முடியும். அதனால் அவர்களுக்கு எப்போது தேர்வு வைப்பது என்பது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார். தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க முடியாது.பள்ளிகள் திறப்பதற்கு நீண்ட காலமாகும் என்றார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்